CPSC
சமூகம் சார்ந்த திட்டங்கள்
CPRC
தமிழ்நாட்டில் சமூக காவல் சேவை மையம்
தமிழ்நாட்டில் சமூக காவல் சேவை மையம் என்பது காவல் துறை மற்றும் அவர்கள் சேவையாற்றும் மக்கள் ஆகியோரிடையே ஒரு பாதுகாப்பான, சுமூகமான சூழ்நிலையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
இது பாரம்பரிய சட்ட அமலாக்க முறைகளுக்கு அப்பாற்பட்டது, குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளூர் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண்பதில் ஈடுபடுத்துகிறது.
"சமூக காவல் என்பது உலகளவில் காவல் சேவை வழங்கலை எளிதாக்கி, நிறுவன திறனை மேம்படுத்த உதவும் ஒரு உருவெடுக்கிற பயிற்சி ஆகும். பல நாடுகள் சமூகச் செலவினத்தை தங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இணைத்துள்ளன."
தமிழ்நாட்டில் சமூக காவல் சேவை மையம்
தமிழ்நாட்டில் சமூக காவல் சேவை மையம் என்பது காவல் துறை மற்றும் அவர்கள் சேவையாற்றும் மக்கள் ஆகியோரிடையே ஒரு பாதுகாப்பான, சுமூகமான சூழ்நிலையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
CPSC
ஈடுபாட்டிற்கான உத்திகள்
CPRC
செயல் இலக்கு மற்றும் குறிக்கோள்
உள்ளூர் சமூக காவல் குழுக்கள், காவல் நிலையங்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோரிடையே பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் ஒரு பாலமாக இருப்பதே சமூக காவல் சேவை மையத்தின் அடிப்படை இலக்காக உள்ளது. மேலும், சமூக குழுக்களிடையே ஈடுபாடு, சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், உள்ளூர் மக்களின் குறிப்பிட்ட பாதுகாப்பு தேவைகளை கவனித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காவல்துறையின் வெளிப்படையான போக்கை அதிகப்படுத்துவதும் இம்மையத்தின் குறிக்கோளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Approach
CPSC
ஈடுபாட்டிற்கான உத்திகள்
சமூக காவல் சேவை மையத்தின்பால் ஈடுபாடு ஏற்படுத்துவதற்கான யுக்திகள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் சமூக காவல் சேவை மைய உறுப்பினர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வண்ணம் அவர்களிடையே பல கூட்டங்களை நடத்துதல், காவல் செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்துதல், இரு தரப்பினரிடையே கூட்டு கூட்டங்களை நடத்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே வெளிப்படையான தகவல் பரிமாற்றம், பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளுவதை அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எவ்வித தயக்கமுமின்றி, காவல் துறையினரோடு கலந்து செயல்படுவதை மேம்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்பத்தின் உதவியும் நாடப்படுகிறது.
CPSC
சமூகம் சார்ந்த திட்டங்கள்
இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, அவர்கள் பங்கு கொள்ளும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, தங்கள் சுற்றுப்புறங்களை மக்கள் கண்காணிக்கும் திட்டங்கள் மூலம், தங்களது பகுதிகளில் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் மக்களே நேரடியாக பங்கு கொள்ளும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், மக்கள் அவசர நிலையை எதிர்கொள்ளும் வகையிலும், அவர்களது திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகள், உள்ளூர் பாதுகாப்பு ஆகியவை குறித்த பயிற்சி வகுப்புக்களும், பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு முதலில் சென்று சூழ்நிலையை கையாளும் வகையில் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
CPRC
சமூக காவல் மையங்களின் நன்மைகள்
முதலில், சமூக காவல் மையம் என்பது, காவல்துறை சேவையாற்றும் மக்களது தேவைகள் என்ன, அவற்றை வழங்குவதிலுள்ள சவால்கள் என்ன என்பது குறித்து ஆழ்ந்த புரிதலை காவல் அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்துகிறது. அதன் மூலம், மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவையாற்றும் வழிமுறைகளை உருவாக்க காவல்துறையினரால் முடிகிறது. மக்களை பொறுத்தவரையில், சமூக காவல் மையம் என்பது, தங்களது குறைகளை எடுத்து வைக்கும் ஒரு தளமாக செயல்படுவதோடு, தங்களது சொந்த பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை தாங்களே முன்கூட்டி எடுப்பதற்கும் அவை உதவுகின்றன. இறுதியாக, இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, குற்றங்களை தடுக்கும் அம்சத்தில் கவனம் செலுத்துவதால், குற்றங்களை கணிசமாக குறைப்பதற்கும் இது வழிவகுக்கும் என்பது உறுதி.
CPSC
எதிர்கால திட்டங்கள்

எதிர்காலத்தில், இந்த சமூக காவல் மையங்களின் பணிகளை விரிவுபடுத்துவதிலும், சட்டங்களை அமல்படுத்தும் யுக்திகளை மேம்படுத்துவதிலும், பொது மக்கள் – காவல்துறையினரிடையே பரஸ்பரம், மரியாதை மற்றும் புரிதலை அதிகப்படுத்துவதிலும், கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
இம்முன்னெடுப்புகள், இன்னும் அதிகளவில் பரவலாகும்போது, சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தும் வகையிலும், மக்களது தேவைகளை உடனுக்குடன் கவனிக்கும் வகையிலும் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்கும். அந்நிலையில், தமிழக காவல்துறையின் மீது மக்களுக்குள்ள பிம்பமே மாறிவிடும் என்பது மட்டும் உறுதி. மேலும் இத்தொடர் முயற்சிகளின் மூலம், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மிகவும் இணக்கமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு சமூக காவல் மையம் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Srirangam
Vaikunda Ekadesi Pagal Pathu Festival Begins
Arulmigu Aranganathar Temple, Srirangam
22 Days
2 Lakhs
Srirangam
Mahalaya Ammavasai Festival
Ammamandapam, Srirangam
1 Day
3000
Trichy City
Vinayagar Chathurthi Festival & Vinayagar Idol Immersion Procession
Trichy City
3 Days
6000
Srirangam
Aadi Ammavasai
Ammamandapam, Srirangam
1 Day
2500
Srirangam
Aadi Perukku
Ammamandapam, Srirangam
1 Day
2500